18-Jul-2018 - செம்புனல் அத்தியாயம் - 11 பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.  |  20-Jun-2018 - பிடி காடு அத்தியாயம் - 26 (இறுதி அத்தியாயம்) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.  |  10-Jun-2018: பின்வரும் கதைகள் தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. 1. பிழையேத் திருத்தமாக 2. கானல் நீர் பார்வை 3. பொய்ப் பூட்டு  |  
head-logo
 
   
Home | Novels | Gallery | Completed Novels | Ongoing Novel | Others | Shop Now |
 
 
Poems
Short stories
Articles
பிடி காடு

நாம் வாழும் இவ்வுலகைக் காடாக உருவகப்படுத்தி அதில் சில மனிதர்களின் வாழ்வில் ஒரு காலக்கட்டத்தில் நிகழும் நிகழ்வுகளை சொல்லும் கதை என்பதால் பிடி காடு என்று தலைப்பிட்டேன்.

பிடி என்ற சொல்லுக்குப் பெண் யானை என்ற பொருளும் உண்டு. யானைக்கு நீர்நிலையை உணர்ந்து கொள்ளும் திறன் இருப்பதால் மற்ற மிருகங்களுக்கு வாழ்வாதாரத்தைச் சுட்டிக் காட்டி வழிநடத்திச் செல்கிறது. ஒரு பெண்ணின் வாழ்வை மையமாக வைத்து எழுதியதாலும் இந்தத் தலைப்பை தேர்ந்தெடுத்தேன்.

Posted period: 05-Nov-2016 - 20-Jun-2018

Read More >>
நிழலே நிஜமாய்

வாழ்ந்து முடித்த நாட்களைப் பெட்டகத்துள் சேகரித்து வைத்திருக்கும் நம் இறந்தகாலம். எதிர்காலத்தில் நமக்காய்க் காத்திருப்பவை அநிச்சயமானவை. இரண்டையும் இணைக்கும் பாலமாய் நிகழ்காலம்.


கடந்து சென்றவற்றை எண்ணிப் பார்க்காமல் இனிவரும் நாட்களைக் கடப்பது சாத்தியமா?

 

Posted period: 01-Jan-2016 - 02-Jun-2016

Read More >>
முத்தம் என்னும் மிட்டாய்

காதல்...

பேதங்கள் எதுவும் பார்ப்பதில்லை.

எல்லைக் கோடுகளை

கடக்க அஞ்சுவதில்லை.

பிறர் பேசும் மொழி மறந்து,

கண் பேசும் மொழி புரிந்து,

தனகானதோர் உலகம் செய்து,

இம்மையிலும் மறுமையிலும்

பிரியாததோர் உறவு கொண்டு,

சுவாசம் மறந்து தனதாக்கிய

இதயம் புரிந்து ஜீவித்திருக்கிறது.

Posted Period: 06-Aug-2015 - 18-Dec-2015

Read More >>
பொய் பூட்டு

காதல் - தென்றலாய் வந்து வாழ்வை புரட்டி போடும். முதல் பார்வையிலேயே ஆளை வீழ்த்தும். நாம் இதுவரை அறிந்திடாத உணர்வை உணரச் செய்யும். இப்படி காதலித்த இருவரின் வாழ்வில் என்ன நடந்தது?
என்னுடைய ஒவ்வொரு கதையிலும் புதிதாய் எதையேனும் முயற்சிக்கும் நான் இந்த கதையிலும் பல புது முயற்சிகளை செய்துப் பார்த்துள்ளேன்.

Posted Period:06-Jan-2015 - 10-Apr-2015

Read More >>
என் சுவாசம் நீயே

வாழ்க்கை ஒரு சக்கரம். இன்பமும் துன்பமும் நிரந்திரமில்லை. மீள முடியாத துயரம் நிகழும்போது மனம் துவண்டுப் போகிறது.
அதிலிருந்து மீள, அதை கடந்து வர வீட்டில் உள்ளவர்களும் நம்மை சுற்றி இருப்பவர்களும் உதவி செய்கின்றனர்.
இக்காலத்தில் அதிகரித்து வரும் ஒரு நிகழ்வு பல ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்திருந்தால் என்ற என் கற்பனையில் உதித்த கதை.

Posted Period: 01-Nov-2014 - 03-Jan-2015

Published on 01-Jan-2017

Read More >>
சாமரம் வீசும் புயலே

சின்ன சின்ன சண்டைகளும் செல்ல சீண்டல்களும் தம்பதியினரின் இடையில் இருக்கும் நெருக்கத்தை அதிகரிக்கச் செய்கின்றன. இல்வாழ்க்கையின் சுவாரஸ்யத்தை கூட்டுகின்றன. சண்டையிட்டாலும் அன்பு குறைவதில்லை. 

அதே சண்டை பெரிதானால் அதன் விளைவுகள் எப்படியிருக்கும்?

Posted Period: 11-Aug-2014 - 13-Oct-2014

 

 

Read More >>
தித்திக்குதே தேன்மழையாய்!

வலைத்தளத்தில் "கானல் நீர் பார்வை" என்ற பெயரில் தொடராக நான் எழுதிய கதை "தித்திக்குதே தேன்மழையாய்!" என்ற பெயரில் புத்தகமாக வெளியானது.

தூரத்திலிருந்து பார்க்கும்பொழுது கண்ணுக்கு தெரியும் கானல் நீர் அருகில் செல்லும்பொழுது மறைவது விந்தை. நம் உடன் இருப்பவர்களின் குணாதிசயங்களும் சில நேரங்களில் கானல் நீர் போன்றதே. தொலைவிலிருந்து பார்க்கும்பொழுது வித்தியாசமாகத் தெரியும் மனிதர்கள் அருகில் செல்ல செல்ல மாறுப்பட்டு தெரிவதுண்டு. அப்படி சிலரை மையமாக வைத்து எழுதிய கதை.

Published on: 02-Jul-2015

Read More >>
யாதுமாகினாய்

இப்போது இங்கே இதை படித்துக் கொண்டிருக்கும் உங்கள் வீட்டிலும் இப்படி ஒரு கதை நடந்திருக்கலாம். கதை படிக்கிறேன் என்று சில நாட்கள் கதை எழுதிகிறேன் என்று பல நாட்கள் கணவனை இம்சித்த மனைவிக்காக அவன் செய்தது என்ன?  

Posted period: 14-Feb-2014 - 16-Apr-2014

Read More >>
இமையாக நான் ! விழியாக நீ !

வலைத்தளத்தில் “பிழையே திருத்தமாக” என்ற தலைப்பில் தொடராக நான் எழுதிய கதை “இமையாக நான் ! விழியாக நீ !” என்ற பெயரில் எனது முதல் புத்தகமாக வெளியானது. 

நம்மை சுற்றி பல நிகழ்வுகள் நடந்தாலும் அவற்றுள் சில நமக்கே தெரியாமல் நம்மை மனதளவில் பாதிப்பது இயல்பான ஒன்று. அப்படி நாயகன் நாயகியின் வாழ்வில் என்ன நடந்தது? அவர்கள் அதை எப்படி கடந்து வருகிறார்கள்? 

Published on: 03-Nov-2014

Read More >>
நகராத தூரங்கள்

ஆண் பெண் நட்பு இயல்பான ஒன்று. அந்த நட்பு காதலாய் மாறுவது? இயல்பே என்னும் நாயகனும் அதை ஏற்க தயங்கும் நாயகியும் எப்படி இணைந்தார்கள் என்பதை சொல்லும் கதை.

Posted period: 18-Aug-2013 - 30-Oct-2013

Read More >>