31-Jul-2018 - செம்புனல் அத்தியாயம் - 14 பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.  |  29-Jul-2018 - பிடி காடு அத்தியாயம் - 27 (இறுதி அத்தியாயம்) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.  |  10-Jun-2018: பின்வரும் கதைகள் தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. 1. பிழையேத் திருத்தமாக 2. கானல் நீர் பார்வை 3. பொய்ப் பூட்டு  |  
head-logo
 
   
Home | Novels | Gallery | Completed Novels | Ongoing Novel | Others | Shop Now |
 
 
Poems
Short stories
Articles
# பொறுமை #

கொஞ்சம் வேகமாக அடித்தால்கூட

காற்றோடு பறந்துவிடுகிறது.

இழுத்துப் பிடித்து வைத்துக் கொள்ள

நான் பட்டக் கஷ்டமெல்லாம்

நொடிப் பொழுதில் வீணாகிவிடுவதை

கனத்த நெஞ்சோடு பிற்பாடு எண்ணிப் பார்க்கிறேன்.

கொட்டிய நெல்லும் சிந்திய சொல்லும்,

நாவினால் சுட்ட வடு

என்றெல்லாம் ஏட்டுக் கல்வி

பயிற்றுவித்த எதுவும் ஒவ்வொரு முறையும்

கைக் கொடுக்காமல் போவது

என் துரதிர்ஷ்டமேயன்றி

வேறு யாரையும் குறை சொல்வதிற்கில்லை.

உள்ளே கனன்றுக் கொண்டிருப்பதை

வெளியே கக்க ஆகும்

நொடிப் பொழுது மட்டும் சிந்தித்தாலும் போதுமே...

சரியாக அந்த நொடிப் பொழுதில்தான்

அதற்கு என் மீதான வெறுப்பு உச்சமடைகிறது.

உணர்ச்சி வெள்ளம் வடிந்தப் பிறகே

அது என்னை ஏமாற்றி

உதறித் தள்ளிச் சென்றுவிட்டதை

அப்பாவியாய் அறிந்து கொள்கிறேன்.

 

Posted on 24-Jul-2018

Read More >>

# காதலும் ஓர் உணர்வே #

இதுகாறும் அனுபவித்திராத வேதனையை

வலியக் கோரும் தவிப்பும்

நிரந்திரமென என்னுள் தங்கிட்ட

நின்னோடு நான் கழித்த களிப்பும்

சிலிர்த்தெழுந்து எனை

சில்லிட வைத்த ரௌத்திரமும்

நிமிரா வண்ணம் 

நிலம் பார்க்க வைத்த நாணமும்

நீயும் நானும்

காதலும் ஓர் உணர்வே

 

Posted on 13-Jul-2018

Read More >>

# தேய்ந்து மறையும் நினைவு #

கண் முன் இல்லாத எதுவும்

கருத்தில் பதிவதில்லை

இருக்கும் யாவும்

உள்ளது போல் நினைவுக் கொள்ளப்படுவதில்லை

நிகழ்வொன்று

சிந்தனை நூறு

திரிந்துப் பெருகிப் பல்கி நிற்கும்

எண்ணங்களடர்ந்த நினைவடுக்குகளின் நெரிசலில்

மூச்சுக்காய்த் திணறுகிறது

உன்னைப் பற்றிய நினைவு

 

Posted on 26-Jun-2018

Read More >>

# இரயில் பயணம் #

முந்தைய இரவின் மிச்சம் 

இந்நாளின் துவக்கம் 

இரண்டும் சங்கமித்த அதிகாலை வேளை 

சிகைக் கலைத்த இளங்காற்று 

நில்லாமல் ஓடி மறையும் காட்சி 

ஒன்றோடொன்று தொடர்பில்லா 

நினைவுகளின் அணிவகுப்பு 

அறியா முகங்களும் 

பழகிய தடங்களும் 

என்னுள் கரைந்திட்ட நானும்

Posted on 13-Jun-2018

Read More >>

# தேடித் தொலைகிறேன் #

தேசம் அறியேன் 

வாசம் செய்யும் முறை அறியேன் 

பாஷை அறியேன் 

பேசும் வகை அறியேன் 

உணவு புதிது 

உண்ணும் வழக்கம் புதிது 

யாதும் புதிதே யாவரும் அந்நியராயிருக்க 

‘நான்’ மட்டும் எனக்குப் பழக்கப்பட்ட பிம்பமாய் 

திக்கற்றக் காட்டில் திசைத் தேடித் தொலைகிறேன்

Posted on 12-Jun-2018

 

Read More >>

# நிலா பிம்பம் #

பிரயத்தனம் பல செய்தும்

கைகெட்டாமல் தப்பிச் செல்கிறகு

நீர்பரப்பின் மேலடுக்கில்

மிடுக்காய் மின்னும் நிலாபிம்பம்

முயற்சி கைவிடாமல் தடுக்கிறது

எங்குச் சென்றாலும்

உடன் வரும் வான் நிலா

இரண்டுக்குமிடையில் நிலவொளியில்

நனைந்தபடி நான்

Posted on 12-Jul-2016

 

Read More >>

# காற்றில் கரைகிறேன் #

வெயிலில் மின்னும் பச்சை

இலைகளை தலையாட்ட வைத்து

அந்தியில் உலர்ந்த பூவின்

இதழொன்றை பூவிலிருந்து பிரித்தெடுத்து

கிழிந்த காகிதத்தின் மீதத்தை

மேலே எழச் செய்து

கண்ணில் கனவு தேக்கி

எட்டி நடைபோடும்

சிறுவனின் சிகை கலைத்து

துவண்ட முகம் மோதி உயிர்ப்பூட்டி

தன்னிலை மறந்து தன் நிலை துறந்து

காற்றில் கலந்து, கரைந்து

காற்றோடு பறந்து செல்கிறேன்

Posted on 13-Jun-2016

Read More >>

# துளி #

ஒரு புள்ளியில் துவக்கம்

மற்றொன்றோடு இணைந்து விருத்தி

இன்னும் பலதோடு சேர்க்கை

மெதுவாய் தோன்றும் நேர்க்கோடு

மேலும் பெருகுமோ?

இருள் அடர்ந்த வானம்

Posted on 11-Jun-2016

Read More >>

# அருகில் காணும் தூரம் #

மழையின் பேரிரைச்சலில் கரைந்துப் போகிறது

என் நேசமுரைக்கும் மனதின் கூக்குரல்

உன்னை சேராது போனது நீ அருகில் நின்ற

நொடிகளில் நீண்டு துடித்த இதயத்துடிப்பின் ஒலி

விலகிச் செல்கையில் தடுக்க

வாய் திறந்தும் வார்த்தையில்லை

இடைவெளி கூடுவதை மௌனமாய் பார்த்திருக்கிறேன்

உனக்கும் எனக்குமான உறவின் கடைசி முடிச்சு

மெலிந்து மறையும் வரை

Posted on 10-Jun-2016

Read More >>

# மலைகள் இதழ் - 98 #

மலைகள் இதழ் - 98ல் வெளியான எனது கவிதைகள்.

 

மலைகள் இதழ் - 98

 

Posted on 18-May-2016

Read More >>