21-May-2018 - பிடி காடு அத்தியாயம் - 15 பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.  |  01-Jan-2017 - "என் ஸ்வாசம் நீயே" புத்தக வடிவில் MS பதிப்பகம் மூலம் வெளியாகியுள்ளது.  |  01-Nov-2016 - 'இரயில் சிநேகிதம்' என்ற தலைப்பில் நான் எழுதிய கட்டுரை அக்டோபர் 28, 2016 அன்று சிறகு இதழில் வெளியாகியுள்ளது.  |  26-Sep-2016 - இந்தியாவில் மட்டும் கிடைக்கும் பிரெஞ்சு டோஸ்ட் என்ற தலைப்பில் நான் எழுதிய கட்டுரை செப் 24, 2016 அன்று சிறகு இதழில் வெளியாகியுள்ளது.  |  14-Aug-2016 - "திருப்புமுனை" சிறுகதை "சிறுகதைகள்" தளத்தில் படிக்கக் கிடைக்கும்  |  09-Aug-2016 - "நலம். நலமறிய ஆவல்" பிரதிலிபியின் கடிதப் போட்டிக்காக நான் எழுதிய கடிதம்  |  12-Jul-2016 - "நிலா பிம்பம்" கவிதை  |  04-Jul-2016 - "கவனத்தை ஈர்க்கும் ஒரு சொல்" என்ற தலைப்பில் நான் எழுதிய கட்டுரை ஜூலை 02, 2016 சிறகு இணைய இதழில் வெளியாகியுள்ளது.  |  20-Jun-2016 - "ஆடை மாற்றம் ஆள் மாற்றத்திற்கான முதல் படி" கட்டுரை இந்த வார சிறகு இதழில் (18-Jun-2016) வெளியாகியுள்ளது.  |  15-Jun-2016 - "Run away" article has been published  |  
head-logo
 
   
Home | Novels | Gallery | Completed Novels | Ongoing Novel | Others | Shop Now |
 
 
Poems
Short stories
Articles
# நீளும் தூரம் #

அவன் தயாராயிருந்தான்...
ஏற்கப்படும் நியாயங்களின் அநியாயங்களைக்
கண்டும் காணாது கேட்டும் கேளாது
தடைகள் களைந்தெறியும் வேகத்துடன்
தற்கால முற்போக்கென்னும் சுவரின் திண்மை கடந்து
பிற்காலம் பதியம் செய்ய விதைநிலம் செய்து
மென்மை மாறிய ஓர் ஒற்றையடி பாதையில்
தனித்தில்லையெனினும் தனிமையில் முன்னேற
அவன் தயாராயிருந்தான் !

Posted on 20-Mar-2016

Read More >>

# மூலை #

முகங்கள் பிம்பங்கள் பொய்த்த வேளையில்
சுற்றம் நட்பு கைவிட்ட நாழிகையில் 
பிரதி உபகாரத்தின் எதிர்பார்ப்பின்றி 
என் புலம்பல்களுக்கு செவி மடுத்து 
மௌனத்தை சாட்சியம் வைத்து
எனை தாங்கக் காத்திருக்கிறது 
எங்கும் எப்போதும் ஏதோவொரு மூலை

Posted on 18-Mar-2016

Read More >>

# இடைவெளி #

நேரமிருக்கிறது 
காலமிருக்கிறது 
காலன் கொண்டுப் போகும் முன் 
காலம் கற்றுத் தந்த படிப்பினை யாவையும் 
பெயரன் உனக்கு சொல்லியே செல்வேன்
என் காலம் உன் காலம் மாறியேப் போகும்
எக்காலமும் மாறா சூத்திரங்கள் பலதும்
பகிர்ந்தேக் கொள்வேன் பணிவோடு கேளாய்
உனது எனதென்ற காலங்கள் கடந்து
உனக்கும் எனக்குமான இடம் பெயர்ந்து 
ஒன்றாய் சங்கமிக்கும் நாளும் நன்றே

Posted on 16-Mar-2016

Read More >>

# தேர்வுகள் #

எழுதிய தேர்வுகளைக் காட்டிலும்
வாழ்வில் தினம் சந்தித்த தேர்வுகள் அநேகம்
சில கணக்குப் போட வைத்தன
சில புவியை சுற்ற வைத்தன
சில அறிவியலை ஆராயச் செய்தன
சில வரலாறு படைக்கும் துணிவை தந்தன
சில மொழிப் பயன்படுத்துவதற்கான திறனை வளர்த்தன
ஒவ்வொரு தேர்வெழுதும் பொழுதும் ஒரு மனநிலை
முடிவை அறிய ஆவலைத் தூண்டும் தேர்வுமுண்டு
முடிவில்லா வெளியில் பயணிக்க வைப்பதுமுண்டு
தோல்வியை எண்ணி துவளவும் 
தோற்கும்போது பாடம் கற்பிக்கவும் 
எழுதிப் பார்க்கிறேன் தேர்வொன்றை

Posted on 16-Mar-2016

Read More >>

# தேவதூது #

தினமும் போலத்தான் புலர்ந்தது இன்றும் 
மற்றுமொரு காலை பொழுது
இன்னுமொரு சராசரி நாளின் துவக்கம்
என் விருப்பமின்றி என் அனுமதியின்றி 
என்னைச் சுற்றிக் கொள்ளும் தினப்படி வாடிக்கைகள்
ஒளிரும் சூரியனின் வெப்ப வீச்சிலிருந்து தப்பி 
ஒண்ட இடம் தரும் அதே மர நிழலில் தான் நின்றிருந்தேன்
கொஞ்சமாய் வீசிய கோடை காற்றின் வேகம் தாளாமல் 
சுழன்று வீழ்ந்த காய்ந்த சருகில் இருந்தது 
என் முந்தைய இளைப்பாரல்களின் மிச்சம்
பெருமூச்செறிந்து புலன்களை ஆசுவாசப்படுத்திய 
நொடிகளின் ஏதோவொரு கணப்பொழுதில் 
எங்கிருந்தோ பறந்து வந்ததந்த தேவதூது !
புதிதாய் பிறக்க வைத்து புத்துணர்வு பெறச் செய்து 
என் உள் இருக்கும் என் பிம்பத்தை 
எனக்குக் காட்டிச் சென்றது
நில்லாமல் ஓடும் உலக நியதியின்படி
என் ஓட்டத்திற்கான அடுத்த அடியை எடுத்து வைக்கிறேன்
இம்முறை பூமியில் பாதம் புதைத்து
ஒரு தளிரையேனும் துளிர்த்தெழச் செய்யும் வேகத்துடன்

Posted on 16-Mar-2016

Read More >>

# நியாயங்கள் இருப்பின் #

பொல்லா உலகம் பொய்யே சொல்லும்

நல்லோர் கூற்றும் நலிந்தே போகும்

மற்றோர் உயிர்க்கு மதிப்பும் உண்டோ

இல்லையென்பார் அதில் இன்பமும் கொள்வார்

கொலையே செய்வார் தம் குலமே வாழ

தவறில்லையென்று தறிகெட்டு திரிவார்

குற்றம் சுட்டுவோர் கூற்றும் அம்பலம் ஏறுமோ?

Posted on 15-Mar-2016

Read More >>

# நீ சொன்ன சொல்ல நம்பி #

எல்லாமே சரியாப் போகும்முன்னு

நீ சொன்ன சொல்ல நம்பி

ஒத்தையில ஒங்கூட நிக்குறேன்

நெதம் ஒரு சாக்கு

நித்தம் ஒரு சமாதானம்

நீ சொன்ன எல்லாமே

எங்காயத்துக்கு மருந்தாத்தான் மாறிப் போகுது

விடியும்முன்னும்

வெளிச்சம் வரும்முன்னும் நம்ப வைக்குற

கண்ண கசக்கி நாம்பாத்தும்

ஒண்ணும் தெரியுதில்லையே

புலரும்முன்னு சொன்ன எஞ்சாமி

எப்போன்னு கொஞ்சம் நீ சொல்லைய்யா

Posted on 15-Mar-2016

 

Read More >>

# உன்னுள் கலந்திட #

என்றோ ஒருநாள் பரிட்சயமில்லா முகமாய் இருந்தாய்
பார்த்துப் பார்த்து பழக்கப்பட்டபின் புன்னகை பூத்தாய்
பேசினாய் 
பழகினாய்
கண்ணியம் காத்தாய்
இடைவெளி விட்டு விலகி நிற்பதும் நெருக்கத்தை கொடுக்குமோ?
நீ உடனில்லாத நொடிகள் யுகங்களாய் தோன்ற
நீ இல்லாத இடங்கள் வெறுமையாய் காட்சியளிக்க
நீ பேசாத மௌனங்கள் மொழியை மறக்கச் செய்ய
நான் என்னும் நிஜத்தை கடந்து 
நீ என்னும் மாயைக்குள் சிக்குண்டேன்
நீ என்பதே நிஜமானால் 
நான் எனை இழக்க இசைவாயா?

Posted on 15-Mar-2016

Read More >>

# பெண் #

கருவறையிலிருந்து உயிருடன் வெளி வர போராட்டம்
சமூகத்தை புரிந்து சுற்றியிருக்கும் ஆபத்துகளை உணர்ந்து 
தன்னை காத்துக் கொள்ளும் தற்காப்பு முறைகளை 
தானே கற்றுத் தேறும் திறன் 
கற்றல் கற்பித்தல் இரண்டிலும் தலைசிறந்து விளங்கும் ஆற்றல்
சேயாகி தாரமாகி தாயாகி 
என்றும் பிறர் நலன் கருதி
தனக்கென்று ஒரு பாதை அமைத்து 
முத்திரை பதிப்பாள் பெண்ணிவள் !

Posted on 08-Mar-2016

Read More >>

# Friends and Foes #

I have friends and foes
Standing on both my sides
Friend, I stand not to your left or right
Foe, neither to your left or right
Tomorrow you might exchange places, that's alright
I stand where I stand
And I stand by everything I have said

Posted on 04-Mar-2016

Read More >>