23-Jan-2018 - பிடி காடு அத்தியாயம் - 13 பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.  |  01-Jan-2017 - "என் ஸ்வாசம் நீயே" புத்தக வடிவில் MS பதிப்பகம் மூலம் வெளியாகியுள்ளது.  |  01-Nov-2016 - 'இரயில் சிநேகிதம்' என்ற தலைப்பில் நான் எழுதிய கட்டுரை அக்டோபர் 28, 2016 அன்று சிறகு இதழில் வெளியாகியுள்ளது.  |  26-Sep-2016 - இந்தியாவில் மட்டும் கிடைக்கும் பிரெஞ்சு டோஸ்ட் என்ற தலைப்பில் நான் எழுதிய கட்டுரை செப் 24, 2016 அன்று சிறகு இதழில் வெளியாகியுள்ளது.  |  14-Aug-2016 - "திருப்புமுனை" சிறுகதை "சிறுகதைகள்" தளத்தில் படிக்கக் கிடைக்கும்  |  09-Aug-2016 - "நலம். நலமறிய ஆவல்" பிரதிலிபியின் கடிதப் போட்டிக்காக நான் எழுதிய கடிதம்  |  12-Jul-2016 - "நிலா பிம்பம்" கவிதை  |  04-Jul-2016 - "கவனத்தை ஈர்க்கும் ஒரு சொல்" என்ற தலைப்பில் நான் எழுதிய கட்டுரை ஜூலை 02, 2016 சிறகு இணைய இதழில் வெளியாகியுள்ளது.  |  20-Jun-2016 - "ஆடை மாற்றம் ஆள் மாற்றத்திற்கான முதல் படி" கட்டுரை இந்த வார சிறகு இதழில் (18-Jun-2016) வெளியாகியுள்ளது.  |  15-Jun-2016 - "Run away" article has been published  |  
head-logo
 
   
Home | Novels | Gallery | Completed Novels | Ongoing Novel | Others | Shop Now |
 
 
Poems
Short stories
Articles
# காசில்லை #

பால்யத்தில் காசில்லையென்று 
என் இசை பயிற்சியை நிறுத்தினாள் அம்மா
இன்று தெரிந்ததை வாசித்துப் பிழைக்கிறேன்

Posted on 03-Mar-2016

 

Read More >>

# சிற்பிக்கு நஷ்டம் #

மண்ணில் உகந்ததை தேர்ந்தெடுத்து
இலகுவாய் சேர்த்து பிணைந்து வேண்டிய வடிவம் பெற நீர் சேர்த்து 
விருப்பம் கொஞ்சம் 
பாட்டன் முப்பாட்டன் காலத்து கலை 
அழியாமல் காக்கும் சிரத்தை கொஞ்சம் மனதில் நிரப்பி
கை கொண்டும் கருவி கொண்டும் 
மனக்கண்ணில் காணும் ஓவியத்திற்கு நடப்பில் உயிர் கொடுத்து
வெயில் பட அதற்கு உரமேற்றி 
பொருத்தமாய் வண்ணம் பூசுவான் !
பிரதிஷ்டை செய்தப் பிறகு 
காணிக்கை அவன் படைப்பிற்கு 
புறக்கணிப்பு அவனுக்கு

Posted on 03-Mar-2016

Read More >>

# சுவடுகள் #

என் பாதம் நனைக்க எத்தனிக்கிறாய்
நனையாமல் ஒதுங்க முயல்கிறேன்
உன் நுரை தீண்டிய மணலில்
மென்மையாய் தொட்டு பின் கொஞ்சமாய் உள் வாங்கிய
என் பாதம் விட்டச் செல்லும் பாதச்சுவடுகளை
பலம்கொண்ட மட்டும் தடம் தெரியாமல் அழித்துச் செல்கிறாய்
ஒட்டாத என் மீது கொண்ட கோபமா?
என்னால் அழிக்க முடியுமென்ற கர்வமா?
இது என் இயல்பென்று எடுத்துரைக்கும் முயற்சியா?
எதை நிலைநாட்ட விரும்புகிறாய்? 
ஒரு நொடி ஆழமாய் பதிந்து
மறு நொடி மாயமாய் மறையும் சுவடின்
விந்தைக் கண்டு ஏக்கம் கொள்கிறேன்
மறைய வாய்ப்பிருந்தால்....

Posted on 02-Mar-2016

Read More >>

# நீரினூடே #

மனதின் உணர்வுகள் தன்னை முகம் மறைக்க

பொங்கி வழியும் கண்ணீரை கை துடைக்க துடிக்க

வழியும் நீர்வீழ்ச்சியாய் கொட்டும் ஊற்றினடியில்

நீருக்கும் கண்ணீருக்கும் வித்தியாசம் அறியா வண்ணம்

விழி மூடி நின்று

தன் துயரம் தொலைக்க விழையும் பாவை

Posted on 01-Mar-2016

Read More >>

# தோற்றுப் போகிறேன் #

தோல்வி 
ஒன்றன் பின் ஒன்றாக 
என்னை தோற்கடித்துக் கொண்டிருந்தது 
எடுத்து வைக்கும் ஓரோர் அடியிலும் 
தோல்வியின் படிகளை முத்தமிட்ட பாதங்கள் சோர்ந்துப் போக 
இன்னும் கொஞ்சம் தூரம் சென்று 
தோல்வியின் விளிம்பை எட்டிப் பிடித்தால் என்னவென்ற ஆவல் 
ஒருவேளை வெற்றியின் கீற்றுகளில் 
ஒன்றையேனும் கைபற்றக்கூடும்

Posted on 29-Feb-2016

Read More >>

# நிதர்சனம் #

துணுக்குகள் பல சேர்த்து

நிதானமாய் நல்லதொரு திட்டம் தீட்டி

சின்ன சின்ன அடியெடுத்து வைத்து

சரியுமோ சாயுமோவென்றுக் கவலை கொண்டு

இமைத்தால் மறைந்துவிடுமென்று துயில் கொள்ளாது

அல்லும் பகலும் பாடுப்பட்டு உருவாக்கிய கனவு கோட்டை

கணப் பொழுதில் தகர்க்கப்பட்டு மண்ணோடு மண்ணாக

உள்ளுக்குள் சூறாவளியாய் பொங்கியெழும் கோபம்

அண்டத்தையே நசித்து

சாம்பல் குவியலின் மீதேறி நின்று

தூசியை ஊதி தள்ள உந்த

மிஞ்சியது ஒரு துளி கண்ணீர்

Posted on 26-Feb-2016

Read More >>

# சரிதானா? #

ஒரு குல்பியின் விலையில்

பிறந்தநாளின்போது ஆகும் மிட்டாய்க்கான காசில்

பொழுதுபோக்கிற்காக திரைப்படங்கள் காணச் சென்று இடைவேளையின் போது

திரையரங்கில் வாங்கும் பாப்கார்னுக்கு செய்யும் செலவில்

ஒரு ஏழையின் வயிறு நிறைவதற்கான வாய்ப்பு

எத்தனை சதவிகிதம் உள்ளதென

கணக்குப் போட முயன்றுத்

தோற்றுக் கொண்டிருக்கிறேன்

ஒருவேளை தோற்கடிக்கப்படுகிறேனோ என்ற சந்தேகம் என்னுள்...

Posted on 24-Feb-2016

Read More >>

# என்றேனும் #

இன்றில்லையேல் நாளை 
நாளை போயின் மறுநாள் 
கடிகாரத்தின் முட்கள் சுழன்றுக் கொண்டே இருக்க 
எந்த நொடியும் அணைந்துப் போகும் சாத்தியக்கூறுடன் 
நம்பிக்கையொளி பிரகாசமாகியும் மங்கியும் ஒளிர்ந்துக் கொண்டிருக்கிறது 
ஒளி கூட்டி காத்து நிற்க போராடும் ஆன்மாவிற்கு 
பலம் சேர்க்க வேண்டும் 
எப்படியென்றுத் தெரியாத தவிப்பு 
காலத்தை காட்டிலும் விரைவாய் வளர்கிறது

Posted on 23-Feb-2016

Read More >>

# விடியல் பொழுது #

மேகக் கூட்டங்களின் கருமை விடை பெரும் முன்
குயிலோசையின் இனிய காணத்தால் துயில் எழல்
ஆவி பறக்கும் சிற்றுண்டி
பறந்து செல்லும் வாகனம்
வளைவு நெளிவுகொண்ட பாதை
பழகிய பணி
சிநேக புன்னகை உதிர்க்கும் டீக்கடை அண்ணா
ஒற்றை சொல் நல விசாரிப்பு
நேரமின்மையின் பொருட்டு முற்றுப் பெரும் ஊர் புரணி
கட்டஞ்சாயாவின் கடுப்பு (கசப்பு)
சூரிய கிரணங்களின் இளஞ்சூட்டில் 
வேக நடையுடன் 
இயற்கையின் எழிலை 
அவசர அவசரமாய் கண்ணுக்குள் நிரப்பும் வேகம்
என் காலை வேளைகளை அர்த்தமுள்ளதாக்கும் அழகிய தருணங்கள்

Posted on 18-Feb-2016

Read More >>

# தனித்து #

நீண்ட நெடுந்தூர பயணம் 
யாத்திரை தொடங்கியபோது 
கை பிடித்து விரல் கோர்த்து 
நம்பிக்கையூட்டினாய்
நீ உடன் பயணித்தபோது 
தெரியாத தூரம்
புரியாத மனிதர்கள் 
உணராத அச்சம்
தனித்து செல்கையில் 
முகத்தில் அறைந்து துரத்துகிறது 
பயணிக்கிறேன்...
மீண்டும் உன்னை சந்திக்கும்
நம்பிக்கை சுமந்து

Posted on 15-Feb-2016

Read More >>