31-Jul-2018 - செம்புனல் அத்தியாயம் - 14 பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.  |  29-Jul-2018 - பிடி காடு அத்தியாயம் - 27 (இறுதி அத்தியாயம்) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.  |  10-Jun-2018: பின்வரும் கதைகள் தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. 1. பிழையேத் திருத்தமாக 2. கானல் நீர் பார்வை 3. பொய்ப் பூட்டு  |  
head-logo
 
   
Home | Novels | Gallery | Completed Novels | Ongoing Novel | Others | Shop Now |
 
 
# குளியலறை #

சுற்றும் முற்றும் பார்த்து

சப்தம் வராமல் சிரித்துப் பார்க்கிறேன்

உள்ளிருந்து சந்தோஷக் குமிழிகள்

இன்னும் அதி வேகமாய் மேலெழும்பத் துவங்குகின்றன

யாரேனும் பார்த்துவிடக் கூடும்

நிலத்தில் பாதம் பதிக்கிறேன்

இன்னும் கொஞ்சம் அழுத்தம் கூட்டி முயல்கிறேன்

சந்தோஷ ஊற்றின் பிரவாகத்தை

கட்டுக்குள் கொண்டு வர எத்தனித்து தோற்க நேர்கிறது

வெடித்தழும் தருணங்களில்

உடலில் ஏற்படும் நடுக்கத்தை காட்டிலும் அதிக பரப்பரப்பு

வேகமாய் விரைந்தோடி சரண் புகுகிறேன்

காற்றில் மிதந்து குதியாட்டம் போட்டு

மீண்டும் கீழிறங்கும் என்னை சுமக்கிறது குளியலறை

Posted on 06-Apr-2016



Please login to post your views



Posted by : Author