23-Jun-2018 - செம்புனல் அத்தியாயம் - 2 பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.  |  20-Jun-2018 - பிடி காடு அத்தியாயம் - 26 (இறுதி அத்தியாயம்) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.  |  10-Jun-2018: பின்வரும் கதைகள் தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. 1. பிழையேத் திருத்தமாக 2. கானல் நீர் பார்வை 3. பொய்ப் பூட்டு  |  
head-logo
 
   
Home | Novels | Gallery | Completed Novels | Ongoing Novel | Others | Shop Now |
 
 
# இணைப்பு பாலம் #

ஒரு பிடி சோற்றின் இரட்டை பருக்கையாய்
உன்னருகிலிருக்க மனம் ஏங்க
எட்டு பர்லாங் தூரத்தில் எட்டி நிற்கிறாய்
எட்டிப் பிடிக்கும் எண்ணமிருந்தும்
ஓரெட்டும் எடுத்து வைக்கவில்லை
அசைவின்றி இரு புள்ளிக்குமான
இடைவெளியைத் துடைத்தெறிய இயலுமா?
தானே கரைந்துப் போகுமென்ற
குருட்டு நம்பிக்கையின் அடிப்படையில்
இருவரும் நிற்கிறோம்
நேர்கோட்டின் இரு மருங்கிலும்

Posted on 08-Apr-2016



Please login to post your comments