23-Jul-2017 - பிடி காடு அத்தியாயம் - 12 பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.  |  01-Jan-2017 - "என் ஸ்வாசம் நீயே" புத்தக வடிவில் MS பதிப்பகம் மூலம் வெளியாகியுள்ளது.  |  01-Nov-2016 - 'இரயில் சிநேகிதம்' என்ற தலைப்பில் நான் எழுதிய கட்டுரை அக்டோபர் 28, 2016 அன்று சிறகு இதழில் வெளியாகியுள்ளது.  |  26-Sep-2016 - இந்தியாவில் மட்டும் கிடைக்கும் பிரெஞ்சு டோஸ்ட் என்ற தலைப்பில் நான் எழுதிய கட்டுரை செப் 24, 2016 அன்று சிறகு இதழில் வெளியாகியுள்ளது.  |  14-Aug-2016 - "திருப்புமுனை" சிறுகதை "சிறுகதைகள்" தளத்தில் படிக்கக் கிடைக்கும்  |  09-Aug-2016 - "நலம். நலமறிய ஆவல்" பிரதிலிபியின் கடிதப் போட்டிக்காக நான் எழுதிய கடிதம்  |  12-Jul-2016 - "நிலா பிம்பம்" கவிதை  |  04-Jul-2016 - "கவனத்தை ஈர்க்கும் ஒரு சொல்" என்ற தலைப்பில் நான் எழுதிய கட்டுரை ஜூலை 02, 2016 சிறகு இணைய இதழில் வெளியாகியுள்ளது.  |  20-Jun-2016 - "ஆடை மாற்றம் ஆள் மாற்றத்திற்கான முதல் படி" கட்டுரை இந்த வார சிறகு இதழில் (18-Jun-2016) வெளியாகியுள்ளது.  |  15-Jun-2016 - "Run away" article has been published  |  
head-logo
 
   
Home | Novels | Gallery | Completed Novels | Ongoing Novel | Others | Shop Now |
 
 
# காற்றில் கரைந்த பிம்பம் #

ஒத்தையடி பாதையின் முடிவில்

கோடியில் பதுங்கியிருக்கும் ஓர் ஓட்டு வீடு

ஆண்டாண்டு கால பிரயத்தனத்தின் பலனாய்

தன் இருப்பை மறைக்க சுற்றி ஓர் காடு

பச்சையும் பழுப்பும் நடுவில் எல்லை கோடின்றி

பின்னி பிணைந்திருக்கும் ஓர் வனப்பு

உள்ளிருக்கும் மடிந்த காலத்து மனிதர்களின் உயிர்ப்பை

வீசியடிக்கும் ஓர் தாழ்வாரத்து இளங்காற்று

முன்னொரு நாள் செழித்து ஓங்கி தழைத்த

பாரம்பரியத்தை பறைசாற்றும் ஓர் ஆலமர விழுது

அந்தியில் யாரும் அருகில் செல்ல

தயக்கம் தரும் ஓர் பயங்கர தோற்றம்

இப்படியும் அப்படியும் பேசி எப்படியெல்லாமோ

உருமாறிப் போன ஓர் வரலாறு

கடந்து போன நேரத்திற்கும்

வரவிருக்கும் காலத்திற்கும்

நடுவில் தெளிவில்லாத ஓர் திரை பிம்பம்

Posted on 29-Apr-2016



Please login to post your comments