18-Jul-2018 - செம்புனல் அத்தியாயம் - 11 பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.  |  20-Jun-2018 - பிடி காடு அத்தியாயம் - 26 (இறுதி அத்தியாயம்) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.  |  10-Jun-2018: பின்வரும் கதைகள் தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. 1. பிழையேத் திருத்தமாக 2. கானல் நீர் பார்வை 3. பொய்ப் பூட்டு  |  
head-logo
 
   
Home | Novels | Gallery | Completed Novels | Ongoing Novel | Others | Shop Now |
 
 
# கைக்கெட்டா நீ #

என் சூனியத்தின் இருப்பிலும்

இருத்தலின் இல்லாமையிலும்

உடன் கூடி பிரிகிறாய்

உன் போக்கின் சுழற்சியில்

கானகத்தே காணாமல் போன

ஒளிக் கீற்றாய் மறைகிறேன்

தேடலின் வேட்கை

துளியும் இல்லை உன்னிடம்

என் நினைவுகளுடன் களித்திருக்கிறாய்

நிழல் கண்டு நிஜமென்றுக் கொண்டாயோ?

நிதர்சனம் நான்

இங்கு நின்றிருக்க

நீயோ கானல் வெளியில்...

Posted on 03-05-2016



Please login to post your views



Posted by : Author